தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!
தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் எதிர்புறம் மது அருந்திவிட்டு மீன் சாப்பிட்டவர், கை கழுவுவதற்காக தெற்கு பகுதி மன்னார் வளைகுடா அருகே கடலில் இறங்கியுள்ளார். அப்போது திடீரென அலைகளால் இழுத்து செல்லப்பட்ட நிலையில், உடனிருந்த நண்பர்கள் தனுஷ்கோடி மீனவர்களின் உதவியுடன் அரவிந்தை மீட்க முயற்சிப்பதற்குள் அவர் கடலில் மூழ்கி இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக இது குறித்து மெரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அரவிந்த் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!