தனுஷ்கோடியில்  5 அடி உயரத்துக்கு அலை... சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை!

 
 

 ராமேஸ்வரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதியில்  இயற்கையாகவே   கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு நேற்று முதல் வழக்கத்தை காட்டிலும் அதிக கடல் சீற்றமாகவே இருந்தது. மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்து கொண்டிருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழப்பட்டது. அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்ததுடன் கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது.

இதனை சுற்றுலா பயணிகள் பயத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து மொபைலில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டனர்.  அதுபோல் தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்தன.  கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது  இது குறித்து தனுஷ்கோடியில் வசித்து வரும் மீனவர் ஒருவர்  தற்போது கடல் சீற்றத்தால் கடல் நீர் கரையை தாண்டி வந்துள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கடல் நீரில் இழுத்துச் சென்றது. அவற்றை கடும் முயற்சி எடுத்து மீட்டுள்ளோம்.  

அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம்  தடை விதித்துள்ளது.  மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என  சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.   5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கேயே வசித்து வரும் உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்