undefined

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்... வைரலாகும் இன்ஸ்டா... !

 

மலையாளத்தில் தமிழுக்கு வந்து வெற்றி பெற்ற முண்ணனி நடிகைகள் பலர். அந்த வரிசையில் தற்போது   நடிகை ரஜிஷா விஜயன் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்   ‘கர்ணன்’ படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக  அறிமுகமானார். தனது யதார்த்தமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.  

அடுத்து, சூர்யாவுடன் ‘ஜெய் பீம்’, நடிகர் கார்த்தியுடன் ‘சர்தார்’  படங்களிலும் நடித்துள்ளார் நடிகை  ரஜிஷா. தமிழ், மலையாளத் திரையுலகில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை ரஜிஷா  தற்போது திருமணத்திற்குத் தயாராகி உள்ளார்.இவர் மலையாளத்தில்  ஒளிப்பதிவாளராக இருந்து வரும்  டோபின் தாமசுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். இருவரும்  பிறந்தநாளில்  எடுத்த புகைப்படங்களை டோபின் பகிர்ந்துள்ளார். அதில்  ‘என்னுடைய எல்லாமுமானவள் நீ’ என  பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.  

இப்போதும் இருவரும் எடுத்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு   ‘நாம் இருவரும் இன்னும் நிறையப் பயணம் செய்ய வேண்டும். அன்பு, சிரிப்பு என அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.இந்த ஜோடி காதலை உறுதி செய்ததை அடுத்து சக நண்பர்கள், திரையுலகினர் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அத்துடன்  “உங்களுக்கு திருமணம் எப்போது?” என கேட்கத் தொடங்கிவிட்டனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க