undefined

 ‘அமரன்’ பட இயக்குநருடன் கைகோர்த்த தனுஷ்... இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

 
 

நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது ‘அமரன்’ படம். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் நடிகர் தனுஷ் கைகோர்த்துள்ளார். 

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான இந்த படத்திற்கு #D55 என்று தற்போது அழைக்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்குகிறார்.

"ராயன்" திரைப்படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத நிலையில், #D55 ல் களமிறங்குகிறார் தனுஷ். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,  திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான "அமரன்" படம் அனைவரது பாராட்டுக்களைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது. 

#D55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், "தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்" என்றார்.இன்று காலை படத்தின் பூஜை துவங்கிய நிலையில், பலரும் கலந்து கொண்டனர். இன்று சம்பிரதாய படப்பிடிப்பும் துவங்கியது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!