undefined

அனிருத்தை புறக்கணிக்கும் நடிகர் தனுஷ், ரஜினி மகள்கள்... இது தான் காரணம்.!

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோருடன் அனிருத் தொடக்க காலக்கட்டத்தில் அதிக படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அறிமுக படமான 3 படத்தில் தான் அனிருத் இசையமைப்பளாராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது துள்ளலான இசையால் முத்திரை பதித்தார் அனிருத். 3  படத்தில் இடம்பெற்ற Why this kolaveri பாடல் உலகளவில் ட்ரெண்ட் ஆனது மற்றும் YouTube இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல்களில் ஒன்றாக மாறியது.

இதைத் தொடர்ந்து தனுஷ்-அனிருத் கூட்டணியில் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் போன்ற படங்கள் உருவாகின. மற்றும் ஜி.வி பிரகாஷ் கமிட் ஆன பட வாய்ப்புகளையும் அனிருத்திற்கு தனுஷ் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.மறுபுறம், சிவகார்த்திகேயனுடனான கருத்து வேறுபாடு காரணமாக அனிருத்தை தனது படங்களில் இருந்து ஒதுக்கி வைத்தார் தனுஷ். அதை ஐஸ்வர்யாவும் பின்பற்றினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 2வது படமான வை ராஜா வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தார்.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு அனிருத்  இசையமைத்த நிலையில், ஷான் ரோல்டன் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். தனுஷ் - அனிருத் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் அனிருத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது தனுஷுடன் பிரிந்தாலும் ஐஸ்வர்யா தனது லால் சலாம் படத்திற்கு அனிருத்தை பயன்படுத்தவில்லை. அதேபோல் சௌந்தர்யாவும் ரஜினிகாந்த் லாரன்ஸை வைத்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் அல்லது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார்கள். அதனால் இந்தப் படத்திலும் அனிருத் இல்லை.

லால் சலாம் படத்திற்கு இசையமைக்க தனக்கு நேரமில்லை என்று அனிருத் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி மகள்கள் அவரை மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் தனுஷ் அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்து வருகிறார். தனுஷின் கடைசிப் படமான கேப்டன் மில்லர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டி50, டி51 படத்திற்கு ரஹ்மான் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

எனவே ஐஸ்வர்யா, சௌந்தர்யா, தனுஷ் ஆகியோர் தங்களின் வரவிருக்கும் படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதால் அனிருத்தை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தற்போது அனிருத் கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரா ஆகிய படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக உள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க