இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்... ரசிகர்கள் கொண்டாட்டம்!!
தமிழில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் , பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவரது நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதனையடுத்து தனது 50 வது படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இதன் பிறகு தனுஷ் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கி 2025 ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கனெக்ட் மீடியா நிறுவனத் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கான இயக்குனர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. 50 ஆண்டுகளாக திரையுலகில் தனி முத்திரை பதித்து 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களுக்கும் அதிகமான பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது பாஜக எம்பியாகவும் இளையராஜா இருந்து வருகிறார். 50 ஆண்டுகளில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளை முடித்த ஒரே இசைக்கலைஞர் இளையராஜா. இதற்கு முன்பு இளையராஜா பயோபிக்கில் நடிக்க ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த படத்தை இயக்க வெற்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
இதன் பிறகு பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் வெற்றிமாறன் - சூர்யா இணையும் வாடிவாசல் படம் இயக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம், விஜய்யுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்து கைவசம் படம் வைத்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு ரசிகர்கள் தனுஷை இளையராஜா கெட்டப்பில் பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஷமிதாப் படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய பாலிவுட் திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி, சமீபத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பால்கி அளித்த பேட்டியில், “இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தனுஷை வைத்து உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு. தனுஷ் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்" எனக் கூறி இருந்தார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!