undefined

 குலசை தசரா விழா... அக்.6ல் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலக புகழ் பெற்ற தசரா கொண்டாட்டத்தை வருகிற அக்டோபர் 6ம் தேதி காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. 

இதில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், சுவாமி, அம்பாளின் பிரமாண்டமான திருவுருவ அலங்கார ஊர்திகளின் ஆரவார அணிவகுப்புடனும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி சூலம் ஏந்திய 108 பெண்களின் பிரம்மாண்ட அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!