பக்தர்கள் அதிர்ச்சி... மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு!
Mar 31, 2025, 20:15 IST
மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு காரணமாக உணவுகளை மாற்றி வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான பார்வதி என்ற 29 வயது நிரம்பிய பெண் யானை, கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பார்வதி யானையின் இடது கண்ணில் கண்புரை நோய் ஏற்பட்டு, தாய்லாந்து மற்றும் தமிழக கால்நடைத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால், பார்வதி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.