undefined

 புரட்டாசி பெளர்ணமி... செப்.18ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி!

 
 

புரட்டாசி மாத பெளர்ணமியை  முன்னிட்டு செப்டம்பர்  18ம் தேதி வரை விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்களுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.   

இதற்காக செப்டம்பர் 18ம் தேதி வரை பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்வதற்காக செப்டம்பர் 18ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.

பௌர்ணமி வழிபாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென கனமழை பெய்தால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். அதே போன்று பக்தர்கள் இரவில் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட, எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான பொருட்களை மலை மீது கொண்டு செல்லக்கூடாது என்பது உட்பட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை