undefined

பசும்பொன்னில் தேவர் குருபூஜை கோலாகலத் தொடக்கம்!!

 

அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 1908   அக்டோபர் 30 ம் தேதி பிறந்தார் .  “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை அதற்காகவே வாழ்ந்து மறைந்தவர். அவர் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அன்பை பெற்றிருந்தார். அவர் 1963  அக்டோபர் 30 ம் தேதி பிறந்த தினத்திலேயே மறைந்தார். அவர் வாழ்ந்து மறைந்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவில்லம்  கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும்   அக்டோபர்   28   முதல் 30   வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதில் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வர்  

வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். 
 அந்த வகையில் நடப்பாண்டில் விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு  மங்கள இசை மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆன்மீக விழாவாக தொடங்கியுள்ளது. தொடர்ந்து சிறப்பு யாஜ பூஜை நடைபெற்று பால கணபதி, பால முருகன், தேவர் கோவில் ஆகியவற்றிற்கு வருசாபிஷேக பூஜை நடைபெறுகிறது.  தொடந்து முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை ராமநாதபுரம் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.  

இன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணியளவில் தேவரின் தேரோட்ட நிகழ்வும் நடைபெறுகிறது.  நாளை 2வது நாளில் முளைப்பாரியும்,  பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடைபெற உள்ளது.  அக்டோபர் 30ம் தேதி  முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்  ,  அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், இபிஎஸ், ஒபிஎஸ், எம்.எல்.ஏ.,க்கள், டிடிவி தினகரன்,  வைகோ, அண்ணாமலை உட்பட  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.
பசும்பொன்னில் நடைபெறும் விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்,  கண்காணிப்பு மையங்கள், வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.  அதிமுக சார்பில்  குருபூஜையையொட்டி தங்க கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் அதன் அருகில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!