நடிகர், துணைமுதல்வர் பவன் கல்யாண் உயிருக்கு ஆபத்து; உளவுத்துறை எச்சரிக்கை!
பிரபல நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று, தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்
நடிகர் பவன் கல்யாண். இந்நிலையில், சில சட்டவிரோத அமைப்புகளிடம் பவன் கல்யாண் குறித்து பேச்சு அடிபட துவங்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து நிலவி வருவதாகவும் மத்திய உளவுத்துறை ஆந்திர மாநில அரசையும், போலீசாரையும் உஷார்படுத்தியிருக்கிறது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து மத்திய உளவுத்துறை அமைப்பு, நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாணை தொடர்பு கொண்டு எச்சரிக்கை தெரிவித்துள்ளதாகவும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராக பதவி வகித்து வரும் நடிகர் பவன் கல்யாணுக்கு தற்போது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா