undefined

 இன்று மாலை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வ‌ர் உதயநிதி... பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு!

 
 

இன்று மாலை தூத்துக்குடிக்கு துணை முதல்வ‌ர் ஆன பின் முதன்முறையாக செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

திமுக இளைஞரணி செயலாளர், துணை முதல்வராக‌ பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தூத்துக்குடி வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணி அளவில் கார் மூலம் சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருகிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெறும் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் மதியம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தி.மு.க. பவளவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 4 மணிக்கு குறிஞ்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு பயனாளிகளுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

துணை முதல்வ‌ர் ஆன பின்னர் தூத்துக்குடிக்கு முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று மாலை மாவட்ட எல்லையான எட்டயபுரம் நான்கு வழிச்சாலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!