undefined

 நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி... கனமழை அலெர்ட்!

 

 தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து  கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருமாறி தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும்.நவம்பர்  26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே   24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை அதே பகுதியில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 25ம் தேதி மாலையில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, 26, 27 (புதன்கிழமை) மற்றும் 28 (வியாழக்கிழமை) தேதிகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!