கிளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட அட்லி, பிரியா அட்லி ... அம்பானி இல்லத் திருமண விழாவில் ருசிகரம்!

 


 
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருமண கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.  இந்த திருமண விழாவை இந்த உலகமே உற்று நோக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
ஜூலை 12ம் தேதி ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ள நிலையில்  திருமணத்துக்கு முன்னதான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொண்ட்டாட்டத்தில் பல பாலிவுட் திரைபிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லியும் கலந்து கொண்டனர். இருவரும்  ஒரே மாதிரியான டிசைன் கொண்ட காஸ்டியூம் அணிந்து  நடனம் ஆடினர்.  இதில் பிரியா அட்லி கிளாமரான உடையுடன் இருந்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையுமான ஜான்வி கபூர் மயில் போன்ற உடையில் வந்திருந்தார். அந்த உடை அணிவதற்கான காரணத்தையும் மிக பெரிய விளக்கமாக கொடுத்து இருந்தார். "இந்த கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ள ஒரு உடையை அணிய விரும்பினேன்.

இயற்கை அழகு, வனவிலங்கு என முற்றிலும் வித்தியாசமான ஒரு தனிமையான உலகம், நேசிக்கும் மனிதர்கள் என ஜாம்நகரில் எனக்கு ஏராளமான ஸ்பெஷல் மெமரிஸ் உள்ளன.  ஜாம்நகரில் நீங்கள் எங்கு பார்த்தாலும், அழகான மயில்கள்  வரவேற்கும். புல்வெளிகளுக்குள் நுழைந்தால்  இறகுகளை அசைப்பது, சாலைகளைத் தாண்டிச் செல்வது, சில சமயங்களில் காலை உணவை உண்பது என அவை உல்லாசமாக சுற்றித் திரியும்.  அதனால் மயில் நிற லெஹங்கா அணிந்ததற்கான விளக்கம் அளித்தார்.  ஆனந்த் மற்றும் ராதிகா இருவருமே அவர்களின் வீட்டை நம்முடையதுபோல உணர வைப்பார்கள். இந்த மயில் லெஹங்காவை உருவாக்கிய கலைஞர்களுக்கு நன்றிகள். என்னை சிறப்பாக உணர வைத்ததற்கு நன்றி" என குறிப்பில் தெரிவித்து இருந்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!