undefined

டெல்லி விமான நிலைய விபத்து... உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

 
 

இன்று அதிகாலை டெல்லியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருக்கும் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைத்திக்கப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகள் பகுதியில் சிக்கியிருந்த 7 பேரை மீட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 
இந்த விபத்து காரணமாக  டெர்மினல் 1 பகுதியில் இன்று பகல் 2 மணி வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!