undefined

 ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்!

 

 தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பெய்த மழை காரணமாக சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும் சர்வதேச மோட்டார் அமைப்பு ஆய்வை முடிக்கவில்லை. பந்தய சாலையில் ஆய்வுப் பணியை இன்னும் முடிக்காததால் பயிற்சிப் போட்டி தொடங்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக சென்னையில் F4 கார் பந்தயம் நடத்துவதற்கு FIA இதுவரை உரிமம் வழங்கவில்லை. இன்று நடைபெற இருக்கும் தகுதி சுற்று போட்டிகள், பயிற்சி போட்டிகள் மற்றும் FIA  சான்றிதழ் வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை