அதிக பணம் கொடுத்தும் வீட்டை கட்டி முடிக்க கால தாமதம்... ஒப்பந்தகாரர் ரூ.2,60,000 வழங்க உத்தரவு!
வீட்டு கட்டுவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கூறிய தொகையை விட அதிக பணம் பெற்றும் மற்றும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வீட்டை கட்டி முடிக்காமலும் கால தாமதம் ஆக்கி வந்த ஒப்பந்தகாரர் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.2,60,000 வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி என்.ஜி.ஓ.காலனியைச் சார்ந்த திருப்பதி மூர்த்தி என்பவர் திருநெல்வேலி என்.ஜி.ஓ.காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சார்ந்த ஒரு ஒப்பந்தகாரரிடம் தனது வீட்டின் கீழ்த்தளத்தை புதுப்பிக்கவும், கூடுதல் கட்டுமானம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இதற்காக ஏறக்குறைய ரூ.11,00,000 யை ஒப்பந்தகாரர் நுகர்வோரிடம் பல தவணைகளாகப் பெற்றுள்ளார்.
ஒப்பந்தத்தில் கூறியபடி 3 மாதத்தில் கட்டி முடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறி விட்டு சுமார் 7 மாதங்கள் கடந்தும் வேலையை சரியாக செய்து முடிக்கவில்லை. மேலும் பொறியாளரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் மேற்படி ஒப்பந்தகாரர் கூடுதலாக பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால் பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து அதிகமாக பெற்ற தொகையான ரூ.2, லட்சத்தை புகார் மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 50,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 2,60,000 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!