undefined

பத்திரம் மக்களே... இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... நவ.26ல் கனமழை!

 

ரொம்பவே பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்க மக்களே... இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் குறிப்பாக தென்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. போன முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆகியுள்ளது. 3 முறை தள்ளிப்போய் நவம்பர் 11ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

இந்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் இன்று நவம்பர்  23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இது மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 2-3 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 26ம் தேத் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!