பத்திரம் மக்களே... இன்று மாலை 4 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மழைக்காலங்களில் ரொம்பவே பத்திரமாக இருங்க மக்களே. இன்று மாலை 4 மணிக்குள் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று கனமழைக் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!