undefined

பத்திரம் மக்களே... தமிழகத்தில் கனமழை... அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்!

 
பத்திரமா இருங்க மக்களே... மழைக்காலங்களில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதான முதியவர்களைத் தனியே வெளியே அனுப்பாதீங்க. மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மாவட்டங்களில்  கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தள்ளிப்போனது. இது இன்றோ அல்லது நாளையோ உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.  இந்நிலையில் நவம்பர் 13ம் தேதி வரையிலும் தமிழகத்தின்  ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் நவம்பர் 13ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!