undefined

  நடிகர் ஷாருக்கானுக்கு ரூ 50 லட்சம் கேட்டு  கொலை மிரட்டல்!

 


 
பாலிவுட் நடிகர் ஷல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான்கானிடம்  சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து   காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்த விசாரணையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என போலீசார் தெரிவித்தனர்.  நேற்று நவம்பர் 6ம் தேதி புதன்கிழமை  பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு   அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் 308(4), 351(3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நபர் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!