பாலியல் குற்றங்களுக்கு 10 நாட்களில் மரண தண்டணை... மம்தா ஆவேசம்!
இந்தியாவை உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இந்நிகழ்வுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்து நீதி கேட்டு பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. இன்று ஆகஸ்ட் 28ம் தேதி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ர பரிஷத் (மாணவர் அமைப்பு) தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான பேரணியில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இன்று கலந்துகொண்டார். அந்த பேரணியில் மம்தா ” பாலியல் குற்றவாளிகளுக்கு விசாரணை முடிந்து அடுத்த 10 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டதிருத்தம் கொண்டுவரப்படும்.
இந்த சட்டத்திருத்தம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பாமல் தாமதப்படுத்தினால் ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். 20 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் ஜூனியர் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மருத்துவர்கள் தங்களுடைய சக ஊழியருக்கு நீதி கோரி ஆரம்பம் முதல் போராடி வருகின்றனர். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உங்கள் வலி புரிகிறது. உங்களது போராட்டத்தால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தயவுசெய்து உடனடியாக பணிக்கு திரும்புங்கள் பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) சென்று 16 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் நீதி கிடைக்கவில்லை.” என மம்தா பேனர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!