undefined

 கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை; சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர் கைது!

 

சென்னையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். 
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து குணசேகரன் வீட்டில் பதுக்கி வைத்து அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், திடீரென பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை எடை போடும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் நடைத்திய இந்த சோதனையில் விஜய், ரகு ஆகியோர் மூலம் குணசேகரன் அந்த பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. பாஜக நிர்வாகி குணசேகரன் உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!