undefined

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க செப்.30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

 
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். 

2025ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லியில் உள்ள இந்திய ஹச் அசோசியேசன் சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் தகுதியான நபர்கள், வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வயதை அடைந்தவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். முதல் முறையாக ஹஜ் பயணம் செய்ய இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இதற்காக ஆணையத்தின் செயலி மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!