undefined

செத்துப்போன மனிதாபிமானம்.. லெபனானில் இரண்டே மாதங்களில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

 

காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே நடக்கும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக லெபனானை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானில் கடந்த 2 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 1,100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் கூறுகையில், “லெபனானில் இரண்டு மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர், மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், அப்பாவி மக்கள். கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்திருந்தால் வன்முறையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மனித நேயத்தை முதன்மைப்படுத்தியிருக்கலாம். மனிதாபிமானம் காணாமல் போவதும், மறப்பதும் தான் எழும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம்.. என வேதனையுடன் தெரிவித்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!