undefined

”மகளே உனக்கு கடிதம் எழுதுகிறேன்”.. பொதுக்கூட்டத்தில் சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி..!!

 
சட்டீஸ்கரில் கூட்டத்தில் தனது புகைப்படத்தை வரைந்து எடுத்து வந்த சிறுமியை பிரதமர் மோடி அனைவரின் முன்பும் பாராட்டியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் கான்கேரில் நடந்த ‘விஜய் சங்கல்ப்’ தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் ஓவியத்தை கையில் ஏந்தியடி, அவரது பெயரை கூறி அழைத்தார். தனது ஓவியத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியின் மீது, மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடியின் கண்கள் பட்டன.

அத்துடன் அந்த சிறுமியின் முகவரியை எழுதி வாங்கி வாருங்கள். மகளே… கண்டிப்பாக உனக்கு கடிதம் எழுதுகிறேன்’ என்று கூறினார். மோடி இவ்வாறு கூறியதை கேட்டதும், அந்த சிறுமியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.