undefined

 செப்.14 வரை தேதி நீட்டிப்பு... ஆன்லைனில் ஈஸியாக வீட்டிலிருந்தே ஆதார் அப்டேட் செய்யலாம்.. முழு விபரம்! 

 
 


ஆதார் அட்டையில் உங்கள் செல்போன் எண், புகைப்படங்கள், விலாசம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை மாற்ற விரும்புபவர்களுக்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. பலரும் ஆதார் அட்டையில் எப்படி விலாசம் மாற்றுவது, புகைப்படத்தை மாற்றுவது? அலுவலகம் செல்பவர்கள் ஆதார் மையத்திற்கு செல்ல நேரமில்லை என்று தாமதித்து வருகின்றனர். எளிய முறையில் ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.எப்படி ஆதார் அட்டையில் அப்டேட் செய்வது என்று பார்க்கலாம் வாங்க. 


இணையத்தள இணைப்புடன் கூடிய கணினி வீட்டில் இருந்தால் போதும். மிக எளிதில் உங்கள் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். முதலில் ஆதார் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI உள்ளே நுழைய வேண்டும்.உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் உள்ளே செல்லும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ளே செல்ல வேண்டும்.
உங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி, மாற்ற வேண்டியவைகள் விபரங்கள் குறித்த தேவையான அடையாள சான்றிதழ்கள் மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றவும்.


பதிவேற்றி முடித்தவுடன் உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.ஆதார் அட்டையில் மேற்கண்ட தகவல்களை இணையத்தின் வழியில் புதுப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் உங்கள் கருவிழிகள், கைரேகைகள் போன்றவற்றை நீங்கள் இணைய வழி மூலமாக புதுப்பிக்க இயலாது. அதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.

பெயர், விலாசம் போன்றவைகளில் திருத்தங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம். அதே சமயம் ஆதார் அட்டையில் உள்ள பாலின விவரத்தை நீங்கள் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். அதே போன்று ஒருவரின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். இந்த சேவைகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 14ம் தேதி வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை