undefined

அடக்கொடுமையே.. 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்.. அதிர வைக்கும் பின்னணி!

 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் டி.எல். பப்ளிக் பள்ளி   ஒன்று, தங்கள் பள்ளிக்கு 'பெரிய பெயரும் புகழும் பெற வேண்டும்' என்று யாரோ சொன்னதாக நம்பி 2ம் வகுப்பு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகல், அவரது தந்தை ஜசோதன் சிங், 3 ஆசிரியர்கள் (லக்ஷன் சிங், வீரப்பன் சிங், ராம்பிரகாஷ் சோலங்கி) ஆகியோர் சேர்ந்து, விடுதியில் தங்கி இருந்த 2ம் வகுப்பு மாணவனை கொன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஜசோதன் தான். மேலும் போலீஸ் விசாரணையில் ஜசோதன் தனது மகனும், பள்ளியின் இயக்குநருமான தினேஷை மாந்திரீகத்தின் மீது வைத்து இந்த கொடூர செயலை செய்ய வற்புறுத்தியதும் தெரியவந்தது.

மேலும் இதுபற்றி தகவல் அளித்த போலீசார், "பள்ளியின் வெற்றிக்கும், புகழுக்கும் சடங்காக இதை செய்துள்ளனர். குற்றத்தில் வேறு யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த ஜசோதன் ஏற்கனவே ஒரு மாணவரை கொல்ல முயன்றுள்ளார். அது நடக்கவில்லை. அதன் பின்னரே இந்த குற்றத்தை செய்துள்ளார்,'' என்றனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் 600 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை, டெல்லி ஐ.டி. ஊழியராக இருந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, விடுதி ஊழியர்களும், சக மாணவர்களும் மாணவன் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஆனால் நிர்வாகம் தெரியாதது போல் காட்டி, சிறுவனின் தந்தையை அழைத்து, 'உன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறியது. விசாரித்தபோது, ​​மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் உடலுடன் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பல மணி நேரம் காரில் பயணம் செய்தது விசாரணையில் பின்னர் தெரியவந்தது.

நீண்ட நேரமாக குழந்தை எங்கே என்று தெரியாத தந்தை உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணையில், குழந்தை (கழுத்தில் காயத்துடன்) தினேஷ் பாகலின் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பள்ளிக்கு பெயர், புகழ் வரவேண்டும் என்பதற்காகவே நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது பிஎன்எஸ் பிரிவு 103 (1)ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!