undefined

மணிக்கு 2 மணி நேரம் நகர்ந்து மேலும் தாமதமாகும் புயல்... !

 

 வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்   புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரைக்கால் மாமல்லபுரம் இடையே  கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் நிலையில்  கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


அதே நேரத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு  8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி   நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!