ஜூலை 10ம் முதல்  50% சுங்கக் கட்டணம்.... உள்ளூர் மக்கள் அதிர்ச்சி  !

 


மதுரை மாவட்டம் திருமங்கலம்  கப்பலூரில் அமைந்துள்ள மத்திய  அரசின் சுங்கச்சாவடி  2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இச்சுங்கச் சாவடி, நகராட்சிப் பகுதியில் இருந்து  5  கிலோ மீட்டர்  தொலைவில் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த  விதிமுறைகளை மீறி 2 கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது .

 


இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட நாள் முதலில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி வருவதாக தெரிகிறது. இதனால்  அதனை மாற்று இடத்திற்கு மாற்றக் கூறி பல்வேறு போராட்டங்கள் மறியலில்  ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இது குறித்து  நீதிமன்றத்திலும் நாடியா நிலையிலும், விடை கிடைக்காத நிலையில் அவ்வையம் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்து வந்தது.


இந்நிலையில் தற்போது நாளை  ஜூலை 10ம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கவரி கட்டணம் செலுத்த வேண்டும் எனவும்,  கட்டண  சலுகையாக 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளதால் இதுவரை கட்டண விலக்கில் சென்று வந்த  உள்ளூர் வாகனங்கள் நாளை முதல் 50 சதவீத கட்டணத்தை செலுத்த சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!