மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? எது ஆரோக்கியமான டயட் முறை?!
ஆரோக்கியக்குறைபாடு வந்துவிடக்கூடாதே என்ற அக்கறையும் சேரும். மழை குளிர் காலங்களில் வீட்டிற்குள் கம்பளி போன்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொள்வது சுகம் தான் .இருந்த போதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு சவாலான கால காட்டம்.இந்த காலங்களில் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உண்டு.
தமிழர்களின் பாரம்பரிய உணவு தயிர் தான். மதிய நேரத்தில் என்னதான் சாம்பார், காரக்குழம்பு, ரசம், பிரியாணி என என்னதான் சாப்பிட்டாலும் கைப்பிடி அளவு தயிர் சாதம் சாப்பிட்டால் தான் வயிறு குளிரும். மழைக்காலத்தில் தயிர் சாப்பிட ஆசைப்பட்டால் அத்துடன் ஒரு சிட்டிகை சீரக தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். முதல் நாள் தோய்த்த ப்ரெஷ்ஷான தயிரை தான் சாப்பிட வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது அவசியம். அதை தாண்டியும் தயிர் பிரியர்கள் ஏராளம் இவர்கள் என்ன தான் குழம்பு காய் வைத்து சாப்பிட்டாலும் தயிர் சாப்பிட்டால் தான் திருப்தி. ஆனால் தயிரை மழை மற்றும் குளிர் காலத்தில் எடுக்கலாமா வேண்டாமா என்பதில் குழப்பமே நீடிக்கிறது.
மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம். ஆனால் ஒரு சிலர் தயிரை தவிர்ப்பது நல்லது என்கிறது ஆயுர்வேதம்.ஆஸ்துமா , சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் எப்போதும் போல் தினசரி தயிரை அளவாக சேர்த்துக் கொள்ளலாம். தயிரை காட்டிலும் அதிலிருக்கும் கொழுப்பு நீக்கிவிட்டு மோராக சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். மோரை எல்லாக் காலங்களிலும் பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தயிரை அளவோடு சேர்த்து ஆரோக்கியம் காண்போம்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!