undefined

வாகன ஓட்டிகளே உஷார்... இந்தப் பக்கம் போகாதீங்க...  கடலூர் புதுச்சேரி சாலை துண்டிப்பு !

 
 

 வங்கக்கடலில் உருவான பெஞ்சால் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு  பல லட்சம் மக்கள் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால்  உடைமைகள், வீட்டு உபயோக பொருட்கள், சான்றிதழ்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் சேதமாகியுள்ளன.  


இந்த வெள்ளத்தால் புதுவை,  கடலூர் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தது. தென்பெண்ணையாற்றில் டிசம்பர் 2 ம் தேதி 1 1/2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்ததால்,  புதுவை, கடலூர்  மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அன்று மாலை கடலூர்-புதுவை சாலை நீரில்  மூழ்கியதால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து  மாற்றிவிடப்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் கடலூர் -புதுவை இடையே கூடுதலாக 10 கிமீ பயணம் செய்தனர். நேற்று பிற்பகலில்  கடலூர்-புதுவை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிய தொடங்கிவிட்டதால்  மாலை 3 மணிக்கு பிறகு கடலூர்-புதுவை இடையே நேரடி  போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில்   நேற்று நள்ளிரவு 8 மணிக்கு, தவளக்குப்பம் அடுத்த இடையாஞ்சாவடி ஓடைப்பாலம் உள்வாங்கியது.இதனால், புதுவை-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

கடலூர் சென்ற அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.  பாலம்  உள் வாங்கியதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை  பற்றி, அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி   ஆலோசனை நடத்தினார். புதுவை - கடலூர் சாலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கட்டப்பட்ட பாலம், சேதமடைந்தது. அதனை அடுத்து, அதன் அருகே புதிய  பாலம் கட்டப்பட்டு, 1992ல் திறக்கப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி  வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கரைபுரண்டு ஓடிய  வெள்ளம் சங்கராபரணி ஆறு, நோணாங்குப்பம் ஆற்றில் டிசம்பர்  2ந் தேதி பெருக்கெடுத்தது. அப்போது, இடையார்பாளையம் என்.ஆர்.நகர்,  அருகே ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு, உபரி தண்ணீர், இடையார்பாளையம் ஆற்று பாலத்தின் வழியாக ஓடியது. அதிக வேகத்தில் சென்ற வெள்ளத்தால் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் உள் வாங்கியுள்ளது. பாலத்தின் அருகே உள்ள தனியார் படகு குழாம்  ஆற்று தண்ணீர் சுலபமாக செல்ல முடியாமல் தடுத்ததால்தான், பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பாலம் உள் வாங்கியதை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!