கொடுமை... கட்டபொம்மன் வாரிசுகளிடம் நிலம் மோசடி... திமுக பிரமுகர் அடாவடி!
இது தாெடர்பாக தமிழர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் தலைவர் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் கணக்கான நிலத்தை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பல பேருக்கு கிரயம் செய்து விற்றுள்ளார்.
இவர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இதில், அண்ணாமலை (63) என்பவர் 1 ஏக்கர் 33 செண்ட் இடத்தை ரூ.8 லட்சத்திற்கு கிரையம் செய்துள்ளார். ஓட்டபிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று பட்டாவை மாற்றித் தாருங்கள் என கேட்டதற்கு. இது மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசால் வழங்கபட்டது. எனவே இதை வட்டாச்சியர் பட்டா மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
அவர் சரவணகுமாரிடம் இது பற்றி கேட்டபோது நீ எங்கு வேனாலும் போ நான் ஆளுங்கட்சிகாரன் ஒன்னும் பண்ணமுடியாது என கூறியுள்ளார். எனவே அண்ணாமலை இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் சுமார் 4 ஏக்கர் அளவிலான இடத்தை சுமார் 430 பேருக்கு கிரையம் செய்துள்ளார். அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
ஆகவே மோசடி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவும், இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!