undefined

கொடூரம்... மயக்க மருத்து கொடுத்து கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

 

தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில், விடுதி அறையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சர்ச்சையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மாணவ, மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது ஓய்ந்த நிலையில், அடுத்த அதிர்ச்சி திருச்சியில் வெளியாகி இருக்கிறது.

திருச்சியில் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து காதலன் உட்பட 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில், இவர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவி தனது தாயாருடன் வந்திருந்து திருச்சி எஸ்பியிடம் புகார் அளித்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி. இவர் புள்ளம்பாடி விடுதியில் தங்கியிருந்தபடியே தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமயபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). கூலித் தொழிலாளியான இவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.

அதே போல் தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை என்பதால் ஏப்ரல் 13ம் தேதிசிலம்பரசன், மாணவியை அழைத்துக் கொண்டு தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மாணவியை சிலம்பரசன் மயக்கமடையச் செய்தார். பின்னர் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்தி விட்டு, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் எழுந்த மாணவியிடம் அந்த வீடியோவைக் காட்டி, யாரிடமும் சொல்ல வேண்டாம். மீறினால் இணையதளத்தில் இந்த வீடியோவை வெளியிடுவேன் என காதலன் சிலம்பரசன் மிரட்டியுள்ளார்.

எனினும், கடந்த மாதம் 31ம் தேதி மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக அவரது தாயார் வினவிய போது, ​​மாணவி நடந்ததை அவரிடம் கூறியுள்ளார். 3 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிலம்பரசன் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையறிந்த மாணவியின் உறவினர்கள் சிலம்பரசனை கண்டித்த போது அவர்களையும் மாணவியின் ​​வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து, மாணவி மற்றும் அவரது தாயார் திருச்சி மாவட்ட எஸ்பியைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் தன் மகளுக்கு நடந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். 5 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா