undefined

”எனது மனைவியின் இமேஜை கெடுக்க சதி”.. பதறும் ரவீந்திர ஜடேஜா.. பின்னணியில் இது தான்..!

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர  வீரர் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் உள்ளார். ஒருபுறம் அவரது குடும்பத்தில் நடப்பது தற்போது பொதுமக்களிடம்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு குஜராத்தில் உள்ள ஒரு பிரபல நாளிதழில் ஒரு பேட்டிதான் காரணம்.

ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜாவின் பேட்டி ஒன்று வெளியானது. அதில்,  திருமணமான சில மாதங்களிலேயே மகன் ஜடேஜா தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா சில மேஜிக் செய்து தன்னிடம் இருந்து என் மகனை பிரித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.மேலும், நான் ஜாம்நகரில் வசித்து வருகிறேன். ஜடேஜா பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. குடும்பத்தில் யாருடனும் அவருக்கு நல்ல உறவு இல்லை. கடந்த 5 வருடங்களாக பேத்தியைக் கூட பார்க்கவில்லை என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த பேட்டி இணையத்தில் வைரலானது. இது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் ஜடேஜா தனது தந்தையின் குற்றச்சாட்டுகளை எக்ஸ் இணையதளம் மூலம் மறுத்தார்.முற்றிலும் புனையப்பட்ட அந்த பேட்டியில் உள்ள தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த பேட்டியில் ஒரு தரப்பின் கருத்து மட்டும் வெளியாகி உள்ளது. எனது மனைவியின் இமேஜை உடைக்கவே இந்தச் செயல் செய்யப்பட்டுள்ளது என்றார். எனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்துவேன். ஆனால் அது பகிரங்கமாக இல்லை என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க