undefined

'வரவு, கணக்கு சரியில்லை'.. கோவில்களின் பூட்டை உடைத்து நிர்வாகத்தை கையகப்படுத்திய அறநிலையத்துறை!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சத்துக்கூடல் ஊராட்சியில் அப்பர் சாமி மடம், கைலாசநாதர் , மாரியம்மன், விநாயகர், அய்யனார், திரவுபதி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிகள் பத்மநாபன் என்பவரின் நீர் வாகத்தில் தினசரி பூஜை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோயில் வருவாய். செலவினங்கள் குறிந்து கணக்கெடுத்த அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த முடிவெடுத்து, அய்யனார் கோவிலுக்கு பொறியாளர் செந்தில்நாதன், மாரியம்மன் கோவிலுக்கு ஜெயபால் ஆகியோரை அறங் காவலகமாக நியமித்தது.

இவர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றனர். இதற்கு கோவிலை நிர்வகித்து வரும் பத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கோவில்களை பூட்டி சாவியை தனிநபர் வைத்துள்ளதாக கிராம மக்கள் புகாரின் பேரில், கடந்த மாதம் தாசில்தார் உதயகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில், பத்மநாபன் மற்றும் அவரது தரப்பினர் பங்கேற்காமல், ஆட்சேபனை கடிதம் மட்டும் தரப்பட்டது.  கோவில்களின் பொறுப்பை, அறங்காவவர்களிடம் ஒப்படைக்க கோவில்களின் பூட்டை உடைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனையொட்டி, மாரியம்மன், அய்யனார் கோவில்களை  அவர்வளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலா, ஆய்யாளர் கோவிந்தசாமி வி.ஏ.ஒர் வேல்முருகன்  முன்னிலையில் கோவில்களின் பூட்டை உடைத்து, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. முன்னதாக, அறங்காவலர்கள் செந்தில்நந்தன் ஜெயபால் ஆகியோரிடம் கோயில்களின் பொருட்கள் உள்ளிட்ட நீர்வாக பொறுப்புகள் குறித்து ஊராட்சி தலைலர்கள் சக்திவேல், சித்ரா அமிர்தலிங்கம், முன்னாள் தலைவர் காமராஜ் முன்னிலையில் கையெழுந்து பெறப்பட்டது. இதில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் பூட்டை உடைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் நிர்வாகத்தை கைப்பற்றிய சம்பலம், பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!