undefined

போச்சே.... தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை!! பொதுமக்கள் ஏமாற்றம்!!

 

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை தான் ஆனால் சமீபகாலமாக தொழிற்சாலை வாகனப்புகைகளால் ஏற்கனவே காற்று மாசடைந்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை அந்தந்த மாநில முதல்வர்கள் நிர்ணயித்து கொள்கின்றனர்.

அந்த வகையில் அதிக மாசுபாடு அடைந்த தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்த தடை நீட்டிக்கப்படும் என டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர்   கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  டெல்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும், ஆன்லைன் டெலிவரி செய்வதற்கும்   பட்டாசுகளை வெடிப்பதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் 'பட்டாசு கடை' வைக்க உரிமம் வழங்கப்படவில்லை என சுற்றறிக்கை வெளியிடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை பாதுகாப்பதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை