undefined

 நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி!

 
நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவான ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு காட்சிகளை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், உடனடியாக 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்திருந்தது. 

நடிகர் தனுஷீன் இந்த வக்கீல் நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை திரையுலகில் சர்ச்சையைக் கிளப்பியது. நடிகர் தனுஷ் குறித்தும், வன்மத்துடன் அவர் செயல்படுவதாகவும் நயன்தாரா குற்றஞ்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக  நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். 

அதே சமயம் வழக்குத் தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பதிலளிக்க கோரி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!