ATMல் ரூ.2.24 லட்சத்துக்கு கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்!

 


இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தேவைக்கு மட்டுமே பணமாக எடுத்துக் கொண்டு மற்ற அனைத்துக்குமாய் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பணத்தேவைக்கு அருகில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி  கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம் இயந்திரத்தில் பணம் போடப்பட்டிருந்தது.இந்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் ரூ.2.24 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி அதிகாரிகள்,  போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில்  கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களின் மேல் வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!