undefined

10 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.. மம்தா பானர்ஜி அதிரடி!

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்க நிறுவன தினத்தையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். பின்னர் 10 நாட்களுக்குள் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ராஜ்பவனுக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பலாத்கார வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எனது அரசு விரும்புகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.மேலும், “நேற்று (ஆக. 27) தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொண்ட மாநில காவல்துறையின் முயற்சி பாராட்டுக்குரியது. அதற்காக அவர்களை வணங்குகிறேன்.

அவர்கள் தங்கள் இரத்தத்தை கொடுத்தார்கள். ஆனால் பா.ஜ.க.வின் சதியால் ஒரு உயிரிழப்பு கூட  இழக்கவில்லை,'' என்றார். இதற்கிடையில், பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. நாடியாவில் திரிணாமுல் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வலியுறுத்தி பந்த் முழுவீச்சில் செயல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை