5 மணி நேரம்  அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு... நோயாளிகள் கடும் அவதி!

 

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதால் மின்சார தேவை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் காலை முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஈரோடு   சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாகவும்  60க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாவும்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் உள்நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, சமையல் கூடம்   பகுதிகளில் இன்று காலை முதல் மின் சர்க்யூட்டில் பழுது ஏற்பட்டது. இதன்  காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது.  வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!