undefined

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?! சமயோசிதமாய் செயல்பட்ட இன்ஜின் டிரைவர்!

 

கடந்த ஒரு மாத காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ரயில்களைக் கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை அடுத்தடுத்து இரண்டு முறை கான்பூர் மாவட்டத்தில் வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் தண்டவாளப் பாதையில், போல்ட் நட்டுகளைக் கழற்றி இருந்தனர். அதன் பின்னர் கோவில்பட்டி பகுதியில் சுமார் 400 போல்ட்டுகள் வரை கழற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்க சதி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கடையநல்லூர் ரயில் நிலையத்தை அடுத்த சங்கனாப்பேரி பகுதியில் இரவு 7.15 மணியளவில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பாறாங்கல் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தண்டவாளத்தின் நடுவே பாறாங்கல்லைப் பார்த்ததும் உடனடியாக இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல தவிர்க்கப்பட்டது.

பின்னர் டிரைவர் ரயிலில் இருந்து கீழிறங்கி கல்லை அகற்றினார். அதன்பின் சுமார் 30 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இது குறித்து இன்ஜின் டிரைவர், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் தலைமையில் நெல்லை ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா?, பாறாங்கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!