undefined

லிவ்-இன்-டுகெதர் உறவுக்கு அக்ரீமெண்ட்.. அந்தரங்க வீடியோ காட்டி பலாத்காரம்.. அதிர்ச்சி பின்னணி!

 

மும்பையில் 29 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அன்று முதல் இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் உள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இதனால், அந்த பெண் தனது உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் அந்த நபர் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோவை எடுத்து காட்டி, உறவை தொடருமாறு மிரட்டியுள்ளார். அதேபோல வீடியோக்களை பலமுறை காட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்படுவதை தவிர்க்க அந்த நபர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் 11 மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை, பெண் ஒன்றாக வாழும் உறவைத் தொடர ஒப்புக்கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களின் ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை