undefined

 ஜம்மு காஷ்மீர் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

 
 

ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரில் வரும் செப்டம்பர் 18ம் தேதி, செப்டம்பர் 25ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 

90 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றனர். அக்டோபர் 1ம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில், அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. நேற்று பாஜக  44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை