undefined

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்  , கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சிகள்... !

 

 தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் தொடர் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டரோ அப்போது முதலே   மோதல் போக்கு உச்சம் பெற்று வருகிறது.  தொடர்ந்து ஆளுநர்  தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை   கூறிவருகிறார். இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும்  ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறிவருகின்றனர்.  பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினத்தில்   காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.  

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளின் போது நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என பேசினார்.  இதற்கு  காங்கிரஸ் உட்பட பல  கட்சிகள் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.   குடியரசு தினத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். அதன்படி  ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை  காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள்   புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

ஆனால், ஆளுங்கட்சியான திமுகவும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.   சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவும் தேநீர் விருந்து குறித்து  எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால்  ஏற்கனவே தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கடந்த ஆண்டும்  தமிழ் புத்தாண்டு தின  தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க