undefined

’வாழ்த்துக்கள் ரிஷப் பந்த்’.. மீண்டும் சலசலப்பை கிளப்பிய நடிகை!

 

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தொடங்கியுள்ள நிலையில், நடிகை ஊர்வசி ரவுடேலா ரிஷப் பந்திற்கு ‘ஆல் தி பெஸ்ட்’ வாழ்த்து தெரிவித்தது குறித்து ஊடகங்களில் விவாதம் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் டேட்டிங்கில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஊர்வசி ரவுட்டேலா அடிக்கடி ரிஷப் பந்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதால், இருவருக்கும் இடையேயான உறவு குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் ரிஷப் பந்த் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தொடங்கியுள்ள நிலையில், ரிஷப் பந்த் அவருக்கு ‘ஆல் தி பெஸ்ட்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே, சில நாட்களுக்கு முன் அளித்த மற்றொரு பேட்டியில் ஊர்வசி ரவுட்டேலா , ‘ஆர்.பி (ரிஷப் பந்த் ) மற்றும் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்திகள்; இது தொடர்பாக வெளியிடப்படும் மீம்ஸ்கள் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறேன். எனது முழு கவனமும் எனது திரையுலக வாழ்க்கையிலும், நான் ஆர்வமாக உள்ள வேலையிலும் தான் உள்ளது,” என்றார். முன்னதாக 2022 இல், ஒரு நேர்காணலில், "நான் ஆர்.பியை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தேன்" என்று கூறினார். ஆனால் ரிஷப் பந்த் இஷா நேகி என்ற மற்றொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!