ரிஷி சுனக் பெருமிதம்... டி20 உலகக்கோப்பையில்  இந்தியா வென்றதற்கு பாராட்டுக்கள்!  

 
 

பகவத் கீதையை கையில் ஏந்தி பதவியேற்பதை பெருமையாகக் கருதுகிறேன் – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் !
 

பிரிட்டனில்  ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து  லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலில் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வழிபாடு செய்தார்.  அவர்களது வருகையை ஒட்டி அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வழிபாட்டுக்கு பிறகு ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் “ டி20 உலகக்கோப்பையில் இந்தியா வென்றதற்கு பாராட்டுகள். நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன்.  நான் பின்பற்றும் மதத்தின் நம்பிக்கைகளால் ஊக்கம் பெற்றுள்ளேன்.

பகவத் கீதையை கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.  பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே நம் மதம் நமக்கு கற்றுத் தரும் பாடமாக கொள்ளப்படுகிறது. இதனையே எனது பெற்றோர் எனக்கு பயிற்றுவித்தனர்.  என் வாழ்நாள் முழுவதும் நான் தொடர்ந்து பின்பற்றுவேன். இருப்பினும், பல இனத்தவர், பல மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு பிரிட்டன்.

அனைத்து மதத்தினருக்கும் அதாவது ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என அனைவருக்கும்  பாதுகாப்பான எதிர்காலத்தை  அமைத்துத் தருவேன் என உறுதியளிக்கிறேன். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  இந்தியா சென்றிருந்தபோது அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு மேற்கொண்டபோது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன்”  எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!