ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி... கதறிய பெற்றோர்... !
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு பிச்சங்களப்பட்டியில் வசித்து வரும் பெரியாண்டி மகன் லோகநாதன். இவருக்கு வயது 22. இவர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை லோகநாதன், பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்பட்டுக்கு விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டிச்சென்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மணியாரங்குளம் ஊருணிக்குள் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் லோகநாதன் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லோகநாதன் உடலை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் குழந்தை லோகநாதன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க