கல்லூரி மாணவி  ரயிலில் அடிபட்டு பலி.. பிறந்த நாளில் சோகம்...!!  

 

 
தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல் இருப்பார்கள். கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. எந்த நேரத்திலும் பயண நேரம், சாப்பாட்டு நேரம், விழாக்கள் தொடங்கி இந்த இடம் என்று இல்லை.  எல்லா இடத்திலும் போனும் கையுமாக இருந்து வருகின்றனர். கையில்  மொபைலை வைத்துக் கொண்டே சாலையை கடப்பது, ரயில் தண்டவாளத்தை கடப்பது என சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது. எத்தனையோ முறை அசம்பாவிதங்கள் நடந்தாலும் இளசுகள் கண்டு கொள்வதில்லை. செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடப்பது, ரயில் தண்டவாளத்தை கடப்பதால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்க அறிவிப்பு பலகைகள் , விழிப்புணர்வு நிகழ்வுகள்  நடத்தப்பட்ட  போதிலும் தொடர் விபரீதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

திருவள்ளூா் மாவட்டம்  செவ்வாப்பேட்டையில் வசித்து வருபவர்   ரேகா. இவர்   சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்த நாள் . இதனால்   வீட்டின் அருகே உள்ள ப்யூட்டி பார்லர்  சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.  அந்த சமயத்தில் சரியாக  அந்த வழித்தடத்தில்  வந்த விரைவு ரயில் மோதியதில் ரேகா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த   திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிரிழந்தவரின்  சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!