undefined

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  கல்லூரி மாணவன்  கடத்தல்!! சினிமா பாணியில் பயங்கரம்!!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம்   பொங்கலூர் பெருந்தொழுவு ஏடி காலனி பகுதியில் வசித்து வருபவர் சுதா.   இவரது கணவர் குமார் இறந்துவிட்டார். சுதாவின் மகன் குணசேகரன்.   இவர் அவிநாசி பாளையத்தில்  தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சுதாவின் வீட்டுக்குள் மர்மகும்பல்  தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை  அலேக்காக தூக்கி சொகுசுக்காரில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டனர்.   மாணவனின் தாய் சுதா கூச்சலிட்டும், விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் சென்று கொண்டே இருந்தனர். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மாணவனின் தாய் ஒன்றாக சேர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

 இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதல் விவகாரம் ஏதும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில்   விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து மாணவன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை